கொரோனா வைரஸ்

"கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது" - பரிசோதனையில் தகவல்

webteam

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது முதற்கட்ட ‌‌பரிசோதனையில் தெரியவந்துள்ள‌தாக‌ தகவல் வெளியாகி‌‌யுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்‌ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துடன் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்படும் முதற்கட்ட சோதனை நாட்டில் 12 இடங்களில் நடைபெற்று வருகிறது.

375 தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தப் பரிசோதனையில் கோவாக்சின் பாதுகாப்ப‌னது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என பிஜிஐ மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பரிசோதனை பணிகளுக்கு தலைமையேற்றுள்ள மருத்துவர் சவிதா வர்மா தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலையில், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.