கொரோனா வைரஸ்

அரசுப் பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி: சுகாதாரத்துறை சோதனை

அரசுப் பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி: சுகாதாரத்துறை சோதனை

kaleelrahman

ஆவடி அருகே பாலவேடு கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

ஆவடி அருகேயுள்ள பாலவேடு ஊராட்சியில் இயங்கி வருகிறது வில்லிவாக்கம் ஒன்றிய அரசுப் பள்ளி. இங்கு 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 10 மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன.

இது குறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர் பாலவேடு மற்றும் ஆலத்தூர் ஊராட்சியில் முகாமிட்டு பள்ளி மாணவர்களின் வீடுதேடிச் சென்று கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இதனிடையே பரிசோதனை முடிவு வரும் வரை ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது குறித்து தெரியவரும். இதற்கிடையில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகம் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.