விசாகப்பட்டினத்தில் 61 வயதான கொரோனா நோயாளி தனது குடும்பத்திற்கு கொரொனா தொற்று உறுதியான செய்தியைக் கேட்டு மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரிகாகுளம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசியர் ஒருவருக்கு செப்டம்பர் 7ஆம் தேதி கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், பிரத்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அவரைத் தொடர்ந்து, அவருடைய மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய மகன் அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் மனைவி, மருமகள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தியை கேட்ட ஆசிரியர் மனமுடைந்து செவ்வாய்க்கிழமை கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இறந்து சிலமணிநேரம் கழித்து தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுபோன்ற மரணங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்திருந்தாலும், சிலர் பயத்தால் இதுபோன்ற முடிவுகளை அவ்வபோது எடுத்துவருகின்றனர். பயத்தினை கைவிட்டு தைரியமாக கொரோனாவை எதிர்க்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.