தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது. எனினும் 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லாததது ஆறுதல் அளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 90 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 2,447 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 22 ஆக பதிவாகியுள்ளது. கடலூர், தருமபுரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. 23,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோவையில் ஒரே நாளில் 169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ஈரோடு மாவட்டத்தில் 130 நபர்களுக்கும், சென்னையில் 126 பேருக்கும், சேலத்தில் 105 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது.