கொரோனா பாதிப்பு மக்களை வதைத்து வரும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேதனையான சம்பவம் அரங்கேறி வருகிறது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல 6,000 ரூபாயை கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடம் வசூலிக்கின்றனர்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸில் ஒரு மணி நேரம் காத்திருக்க கூடுதலாக 2,000 ரூபாய் நிர்ணயிக்கின்றனர் என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.