கொரோனா வைரஸ்

கேரளாவில் குறையும் கொரோனா: புதிய கட்டுப்பாடுகள் இல்லை

கேரளாவில் குறையும் கொரோனா: புதிய கட்டுப்பாடுகள் இல்லை

Veeramani

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும், தற்போதைய கட்டுப்பாடுகளைத் தொடரலாம் என்றும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட தற்போதைய கட்டுப்பாடுகளைத் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது, புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தாலும், அந்த மாவட்டம் 'சி' பிரிவில் நீடிக்கிறது. சி வகை மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

ஓமைக்ரான் வகை மாறுபாட்டினை கண்டறிய சர்வதேச பயணிகளுக்கு செய்யப்படும் தோராயமான சோதனைகள் 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். ஓமைக்ரான் மற்றும் டெல்டாவைத் தவிர வேறு ஏதேனும் புதிய கொரோனா மாறுபாடுகள் உள்ளதா என்பதை கண்டறியவும் இந்த சோதனை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் நேற்று 42,154 பேருக்கு கொரோனா பாதிப்பும், 10 இறப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர, போதிய ஆவணங்கள் இல்லாததால் 81 இறப்புகள் தாமதமாகப் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் தற்போது 3,11,418 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.