கொரோனா வைரஸ்

உலகளவில் கொரோனா உயிரிழப்பு: 31 ஆயிரத்தை கடந்தது !

உலகளவில் கொரோனா உயிரிழப்பு: 31 ஆயிரத்தை கடந்தது !

jagadeesh

உலகெங்கும் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 351ஆகியுள்ளது.
இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர்
இறந்ததாகவும் இதோடு இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர 92 ஆயிரத்து 472 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும்
கொரோனா உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதில் இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது‌. இத்தாலி நிலவரம் கவலை தரும்
வகையில் உள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆறுதல் தரும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு கொரோனா கட்டுக்குள் வரும் சூழல்
மெல்லமெல்ல உருவாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகள் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்காது என்பது உறுதியாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல குறையத்
தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆயிரத்தை எட்டியுள்ளது.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். பிரான்சில் 2ஆயிரத்து‌ 314 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அதற்கு
அடுத்தபடியாக அமெரிக்காவில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300ஐ நெருங்கியுள்ளது. அங்கு சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும்
சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மூன்றே நாளில் இரட்டிப்பாகியிருப்பது, அதன் தீவிரத்தை காட்டுவதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ்
பல்கலைக்ககழகம் வேதனையோடு கூறுகின்றது. பிரிட்டனில் கொரோனா இறப்புகளை 20 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்த முடிந்தாலே அது தங்களது
மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவுக்கு ஆயிரத்து 19 பேர் இதுவரை
இறந்துள்ளனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கை குறைந்தது 20 ஆயிரத்தையாவது தொடும் என அந்நாட்டு சுகாதாரத் துறையே வெளிப்படையாக
கூறியுள்ளது கொரோனாவின் கோர தாண்டவத்தை உணர்த்துவதாக உள்ளது