கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - டெல்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறதா?

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - டெல்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறதா?

Veeramani

தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்து உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையை எட்டிய நிலையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அத்தனை கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்த்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தினசரி பாதிப்பு 300க்கும் அதிகமாக பதிவான நிலையில் வரும் 20ஆம் தேதி டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் தலைமையில ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது.



இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வருவாய் துறை அமைச்சர் கைலாஷ் எல்லாம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கக் கூடிய முறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து தலைநகர் டெல்லியில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.