ஹைதராபாத்தில் செயல்படும் `பயாலஜிக்கல் - இ’ என்ற மருந்து நிறுவனம், இந்தியாவில் 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை அவசர செயல்பாட்டுக்கு அனுமதிக்க கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கு தேவையான தரவுகளை, அந்நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவிடம் வழங்கியிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்திருப்பாத ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. சமீபத்தில்தான் நிபுணர் குழு சார்பில் 12 - 18 வயதுக்குட்பட்டோருக்கான பயாலஜிக்கல் - இ கொரோனா தடுப்பூசியை, அவசரகால அனுமதியாக சில கட்டுப்பாடுகளுடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தேசிய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் 5 - 12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஸ்.இ.சி. எனும் நிபுணர் குழு, அவசர கால பயன்பாட்டுக்கு இதை பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி வரித்தொகை சேர்க்காமல் ரூ.145 -க்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரு டோஸ்களாக இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தற்போதைக்கு, மத்திய அரசு 5 கோடி பயாலஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவேக்ஸை பெற்று, மாநிலங்களுக்கு அதை விநியோகித்திருப்பதாக ஏ.என்.ஐ. செய்திநிறுவனத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த பயாலஜிக்கல் இ நிறுவனம், தங்களின் 2 மற்றும் 3-ம் கட்ட ஆய்வுகளை கடந்த செப்டம்பர் 2021-லேயே முடித்திருந்தன.
சமீபத்திய செய்தி: ’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலின் ‘சலார்’: பிரபாஸுக்கு வில்லனாக மிரட்ட வரும் பிரித்விராஜ்