கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசமும், தனிமனித இடைவெளியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசத்தை அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா என்றால் கேள்விக்குறியே. முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி? இரட்டை முகக்கவசத்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
1. கொரோனா தொற்றை தடுக்க, முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம். சர்ஜிக்கல் முகக்கவசம், துணியாலான முகக்கவசம் அல்லது என் 95 முகக்கவசத்தை பயன்படுத்தலாம்.
2. முகக்கவசம் நன்றாக மூக்கு, வாயை மூடும்படி பொருந்தி இருக்க வேண்டும். முகக்கவசத்தில் உள்ள கம்பிப்பகுதி நன்றாக மூக்குடன் பொருந்தி இருக்க வேண்டும். முகக்கவசம் நன்றாக பொருந்தி இருக்க மாஸ்க் ஃபிட்டர் அல்லது பிரேஸ் பயன்படுத்தலாம்.
3. தற்போதைய சூழலில் இரட்டை முகக்கவசங்களை பயன்படுத்தலாம். முதலில் சர்ஜிக்கல் முகக்கவசத்தை அணிந்து கொண்டு அதற்கு மேலாக துணியாலான முகக்கவசத்தை போட வேண்டும்
4. இரண்டு சர்ஜிக்கல் முகக்கவசங்களையோ, இரண்டு துணியாலான முகக்கவசங்களையோ ஒன்றாக பயன்படுத்தக்கூடாது. ஒரு சர்ஜிக்கல் முகக்கவசம் + ஒரு துணியாலான முகக்கவசத்தை அணிய வேண்டும். சர்ஜிக்கல் முகக்கவசத்தை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. துணியாலான முகக்கவசத்தை நன்றாக துவைத்து பயன்படுத்தலாம்.
5. சர்ஜிக்கல் முகக்கவசத்தை அணியும்போது சரியாக பொருந்தாவிட்டால் ஒரு முடிச்சு போட்டு நன்றாக பொருந்தும்படி போட வேண்டும். சர்ஜிக்கல் முகக்கவசம் போடும்போது அதில் ஓட்டை இருக்கக்கூடாது.
6. இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட லேயர்களுடன் கூடிய துவைத்து பயன்படுத்தக்கூடிய துணியாலான முகக்கவசத்தை பயன்படுத்தலாம்.
7. சுவாசிக்க சிரமமான துணியாலான முகக்கவசத்தை பயன்படுத்தக்கூடாது.
8. மூச்சை வெளிவிடும் வசதி கொண்ட முகக்கவசத்தை பயன்படுத்தக்கூடாது
1. கழுத்துக்கீழே முகக்கவசத்தை போடுவதால் எந்த பயனும் இல்லை
2. மூக்குக்கு கீழே முகக்கவசத்தை போடக்கூடாது
3.மூக்குக்கு மட்டும் முகக்கவசத்தை போடக்கூடாது
4. காதில் முகக்கவசத்தை தொங்க விடக்கூடாது
முகக்கவசத்தை கைகளால் தொடாமல், விரல்களால் காது பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்