கொரோனா வைரஸ்

“சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதில்லை” - மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

“சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதில்லை” - மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Veeramani

டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் இதுவரை குறையாத நிலையில், சென்னையில் 65% பேர் மாஸ்க் அணிவதில்லை என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, ஆஸ்திரியா, இஸ்ரேஸ், இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா 50 வகையாக உருமாறி வருகிறது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

1.08 கோடி பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசியும்,94 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தவில்லை எனவும் கூறிய ராதாகிருஷ்ணன், பொது இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் தினசரி 600 பேருக்கு கொரோனா தொற்று என்பதை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்படவில்லை எனவும் கூறினார். சென்னையில் 65% பேர் முகக் கவசம் அணியவில்லை எனக் கூறிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.