கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒரேநாளில் 18,454 பேருக்கு கொரோனா உறுதி

Sinekadhara

இந்தியாவில் ஒரேநாளில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நேற்று முன்தினம் 13,058, நேற்று 14,623 என பதிவான நிலையில் இன்று 18,454 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,41,08,996 லிருந்து 3,41,27,450 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் ஒரேநாளில் 17,561 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,78,247லிருந்து 3,34,95,808ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 160 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,52,651லிருந்து 4,52,811ஆக உயர்ந்திருக்கிறது.

இதனிடையே 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. தடுப்பூசி செலுத்தியதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் அதிக அளவு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தராகண்ட் சாதனை படைத்திருக்கிறது. ஜனவரி 16முதல் தடுப்பூசி போடுவது துவங்கிய நிலையில் 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.