கொரோனா வைரஸ்

சென்னையில் வரும் ஞாயிறன்று 1,600 தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் வரும் ஞாயிறன்று 1,600 தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

சென்னையில் வரும் ஞாயிறன்று 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு மெகா முகாமை தமிழக அரசு நடத்துகிறது. இதில், சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, மாநகராட்சி நிர்வாகம் தடுப்பூசி முகாம்களை அதிக அளவில் நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிறன்று 1,600 முகாம்களில் 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டன. செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் 46,32,776 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.