கொரோனா வைரஸ்

'வேகமெடுக்கும் ஆம்புலன்ஸ்கள் ஓய்வெடுக்கும் நேரம் வரவேண்டும்' - 108 சேவைக்குப் பின்னால்..!

'வேகமெடுக்கும் ஆம்புலன்ஸ்கள் ஓய்வெடுக்கும் நேரம் வரவேண்டும்' - 108 சேவைக்குப் பின்னால்..!

kaleelrahman

கொரோனா இரண்டாம் அலையில் மிக அதிக பணிச்சுமைக்கு ஆளானவர்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்களும் முக்கியமானவர்கள். இடைவிடாமல் ஆம்புலன்ஸ் சப்தம் கேட்ட சென்னை வீதிகளில் இப்போது அந்த சப்தம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்தவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் வாகன ஒட்டுநர், மருத்துவ உதவியாளர், கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி அழைப்புகளை எடுப்பவர் என 6000 பேர் பணியாற்றிவருகிறார்கள். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை, இந்த கொரோனா 2-ஆம் அலையில் மிகத்தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக ஆம்புலன்ஸ் தேவைக்கான அழைப்புகள் சற்று குறைந்துள்ளதாக கூறுகிறார் 108 சேவை முதன்மை இயக்குநர் செல்வகுமார்.

தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பு இது என்கிறார்கள் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் உறவினர்கள் கூட செல்ல அஞ்சும் சூழலில், முதல் உதவி முதல், மருத்துவமனையில் சேர்ப்பது வரை தளராமல் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்தவர்கள்.

முதல் அலையை காட்டிலும், 2 ஆவது அலையில் ஆம்புலன்ஸ்களின் தேவை மிக அதிகமாக உள்ள நிலையில் அவர்களின் ஓயாத வேலைக்கு சற்று ஓய்வு தருவது மக்களின் கைகளில்தான் உள்ளது.