யுவன்சங்கர் ராஜா  முகநூல்
சினிமா

ஸ்டுடியோவிற்கு வாடகை தரவில்லையா? யுவன் சங்கர் ராஜா தரப்பு கொடுத்த விளக்கம்!

“யுவன்சங்கர் ராஜா ஸ்டுடியோ வாடகை தரவில்லை என்பது அவதூறான புகார். இதை முன்வைத்தவர்கள் மீது, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளோம்” என யுவன்சங்கர் ராஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

PT WEB

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக உரிமையாளர் தரப்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் சட்ட ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "U1 மியூசிக் ஸ்டூடியோ இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லை என்ற புகார் தவறானது. U1 மியூசிக் ஸ்டூடியோ இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. வாடகை கொடுக்கவில்லை என்ற புகார் அவதூறானது.

மேலும், சிவில் தன்மையுடைய வழக்கை குற்றவியல் நடவடிக்கையாக கையாளப்படுகிறது. யுவன்சங்கர் ராஜாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், அவதூறு பரப்பப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நில உரிமையாளருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை யுவன் சங்கர் ராஜா தொடங்குவதாகவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் புகாரை கண்டித்து, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.