leo audio launch file image
சினிமா

லியோ ஆடியோ லான்ச் ரத்து.. புலம்பும் விஜய் ஃபேன்ஸ்.. காக்கா கழுகு கதைதான் காரணமா? கசிந்த ரகசியம்..!

நடிகர் விஜய்யோட லியோ படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்த போறதில்லன்னு தயாரிப்பு நிறுவனம் சொன்னதுல இருந்து, "இது காரணமா இருக்குமோ, அது காரணமா இருக்குமோ”ன்னு ரசிகர்கள் புலம்பிகிட்டு வர்றாங்க.. இந்த நிலையில, புது தகவல் ஒன்னு சிக்கி இருக்கு...

PT WEB

நடிகர் விஜய் ஓட லியோ படம் அடுத்த மாசம் 19ம் தேதி வெளியாக இருக்கு. படம் ரிலீஸ் ஆகுறது இருக்கட்டும் ஆடியோ லான்ச் எப்பப்பான்னு ரசிகர்கள் அதிகமா எதிர்பார்த்து காத்துட்டு இருந்தாங்க. ஆனா அவங்களோட ஆசையில மண்ண அள்ளி போடுற விதமா 'ஆடியோ லான்ச்சே வெக்கலப்பா' ன்னு தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நேற்று அறிவிச்சாங்க.

அதே அறிவிப்புல, அதிகப்படியான பாஸ் கேட்டு கோரிக்கை வர்றதாலயும், ரசிகர்களோட பாதுகாப்ப கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டதா சொல்லப்பட்டிருந்தது. சரி இப்படி சொன்னா அரசியல் காரணமாக தான் ஆடியோ லான்ச் நடக்கலன்னு பேசுவாங்க நினைச்சுக்கிட்டு, “யாரும் கற்பனை பண்ற மாதிரி அரசியல் அழுத்தமோ வேறு ஏதும் காரணமோ கிடையாது”ன்னு அந்த அறிவிப்பிலே குறிப்பிட்டு இருந்தாங்க.

சமீபமா, விஜய் படம்னாலே ஆடியோ லான்ச் இருக்கும். ஆடியோ லான்ச்னாலே அதுல ஒரு குட்டி கதை இருக்கும். குட்டிக்கதனாலே அதுல ஒரு அரசியல் சார்ந்த கருத்து இருக்கும்ன்றது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். இந்த நிலையில, லியோ ஆடியோ லான்ச் ரத்தானதுக்கு ஜெயிலர் பட ஆடியோ லான்ச்ல, நடிகர் ரஜினி சொன்ன 'காக்கா கழுகு' குட்டி கதையும் முக்கிய காரணம்னு ரசிகர்களால பேசப்படுது.. வழக்கமா படத்தோட வெற்றி விழாவில கலந்துகிட்டு, படத்தோட வெற்றி பத்தி பேசக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெய்லர் படத்துக்கு ஆடியோ லான்ச்லயே கலந்துகிட்டு பல விஷயங்கள் பத்தி பேசி இருந்தாரு. அதுல அவர் சொன்ன காக்கா கழுகு கதை ஒரு பெரிய விவாதத்தையே உருவாக்கிச்சு..

இந்தக் கதை யாரை குறிப்பிட்டு இருக்குன்னு சொல்ல வேண்டியது இல்ல. அதனால லியோ ஆடியோ லான்ச் வச்சா கண்டிப்பாக காக்கா கழுகு கதை பத்தி பேச வேண்டிய கட்டாயம் வரும், போதாக்குறைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிச்சா பாதுகாப்பு தேவ அப்டின்றதெல்லாம் கணக்குல வச்சிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாவும் பேசப்படுது.

அதுமட்டுமில்லாம, 2019ல நடந்த பிகில் ஆடியோ லான்ச்ல ரசிகர்கள் தாக்கப்பட்டது, சமீபத்தில் நடந்த ஏ.ஆர் ரகுமானோட ‘மறக்குமா நெஞ்சம்’இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி, ரீசண்டா அதிகப்படியான கூட்டத்துல மதுரைல தொடங்கிய உடனேயே நிறுத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி, மாதிரியான விஷயங்கள், லியோ ஆடியோ லான்ச்ல நடந்திட கூடாதுன்னு படக்குழு சுதாகரிச்சிக்கிட்டதா தெரியுது.

இன்னொரு தகவல் என்னன்னா கிட்டத்தட்ட 10,000 க்கும் மேற்பட்ட போலி டிக்கெட்டுகள் ஸ்பெர்ட் ஆனதாகவும் தகவல் இருக்கு.. சோ எந்த அசம்பாவிதமா நடக்க கூடாது, ரசிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாதுன்னு படக்குழு முடிவு பண்ணதா தெரியுது. இருந்தாலும், அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என்று சொன்னதே, அரசியல் அழுத்தம் தான் காரணமா அப்படின்னு ரசிகர்கள்ல பேச வச்சிருக்கு.. ஒருவேள இருக்குமோ?