சினிமா

’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்?

’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்?

webteam

ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக ஒன்று கூடிய ’மெரினா புரட்சி’யை விறுவிறுப்புக் குறையாத சினிமாவாக்கி இருக் கிறார், இயக்குனர் எம்.எஸ்.ராஜ். நாச்சியார் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளையும் பேசும் படமான இதை, மத்திய திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்த்தனர். பின்னர் படத்துக்கு தடை விதித்தனர். இந்தப் படம் மறு சீராய்வுக் குழுவுக்கு அனுப் பப் பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறையை யார் நிகழ்த்தினார்கள் என்பதும், மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், அரசியல்ரீதியான சர்ச்சைகள், சமூக விரோதிகள் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தடை விதித்திருக் கலாம் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு எதிராக ’பீட்டா’ அமைப்பு கடுமையாகப் போராடியது. அந்த அமைப்பு இந்தப் படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய அடுத்த வாரமே படத்துக்கு தணிக்கைக் குழு தடை செய்ததாகக் கூறப்படுகிறது.