சினிமா

‘பத்மாவதி’ படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன்?: தணிக்கைக்குழு உறுப்பினர் விளக்கம்

‘பத்மாவதி’ படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன்?: தணிக்கைக்குழு உறுப்பினர் விளக்கம்

webteam

பத்மாவதி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்காதது ஏன் என்பது குறித்து தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா புதிய தலைமுறையிடம் கூறியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள பத்மாவதி திரைப்படம் சரித்திரம் தொடர்புடையதா? கற்பனை கதாபாத்திரங்களா? என்பதை படக்குழுவினர் இதுவரை தெரிவிக்காததால் அந்த படத்திற்கு சான்றிதழ் அளிக்கவில்லை என, மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மல்லிகா, “பத்மாவதி படம் சரித்திரமா? கற்பனையா? என்பதை தெரிவிக்கவில்லை. அலாவுதீன் கில்ஜி மீது பத்மாவதிக்கு விருப்பம் இ‌ருப்பதுபோல் காட்சிகள் இருந்தால் நீக்க வேண்டும். கற்பனையாகக் கூட ராணி விருப்பம் தெரிவிப்பது போன்ற காட்சி இருக்கக்கூடாது என ராஜ்புத் சமுதாயத்தினர் நினைக்கிறார்கள். படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருந்தால் நீக்கப்பட வேண்டுமென்பது எனது கருத்து. மற்றபடி, சரித்திரமா? கற்பனையா? என்ற விளக்கம் இல்லாததாலேயே இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.