சினிமா

ரஜினி ஜோடி வித்யாவா, தீபிகாவா?

Rasus

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில், ’2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்குகிறது. அதற்கான வேலைகள் சென்னையில் நடந்து வருகிறது.

இதில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது தீபிகா படுகோன் நடிப்பார் என்று தெரிகிறது. ஆனாலும் படக்குழு இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்தது.

தீபிகா ஏற்கனவே, ரஜினி நடிப்பில் கே.எஸ். ரவிகுமார் இயக்குவதாக இருந்த ’ராணா’ படத்தில் நடிக்க இருந்தார். ரஜினிகாந்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார் தீபிகா படுகோன்.