சினிமா

இத்தனை சாதனைகளா...? அதிர வைக்கும் விவேகம் டீசர்

webteam

தல அஜித்தின் விவேகம் பட டீசர் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசரில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அஜித்குமாருடன் இயக்குநர் சிறுத்தை சிவா மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். வீரம், வேதாளம் படத்தைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக இந்தக் கூட்டணி தயாராகி வருகிறது. ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விவேகம் படத்தின் டீசர்தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்துள்ளது. தற்போது வரை 5,05,326 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

விவேகம் பட டீசர் உலக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைக்க இன்னும் ஒரு சில லைக்குகளே உள்ளது. ஆம்! விவேகம் பட டீசர்தான் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஸ்டார்வார்ஸ் திரைப்படம் 5,62,008 லைக்குகளுடனும் இரண்டாவது இடத்தில் அவென்ஜர்ஸ் திரைப்படம் 5,22,053 லைக்குகளுடனும் இருக்கிறது.

மேலும் 5,00,000 லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையையும் விவேகம் டீசர் நிகழ்த்தியுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.