சினிமா

சசிகுமாருடன் கூட்டணி அமைக்கும் மைனா விதார்த்!

webteam

கொடிவீரன் படத்தில் சசிகுமாருடன் இணைகிறார் ‘மைனா’ விதார்த்.

விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வரும் கொடி வீரன் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விதார்த். சசிகுமாருக்கு தம்பியாக நடிக்கும் அவருக்கு ஜோடியாக சனுஷா நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள விதார்த், வரும் 22ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.  விதார் தற்போது, குரங்கு பொம்மை, வண்டி, சீம தண்ணி ஆகிய படங்களிலும் இவை தவிர பாரதிராஜா இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.