சினிமா

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித்தின் ‘தள்லே தில்லாலே’

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித்தின் ‘தள்லே தில்லாலே’

webteam

‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ‘தள்லே தில்லாலே’ பாடல் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகின. ‘விஸ்வாசம்’ மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்திருந்தது படக்குழு.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘வேட்டிகட்டு’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்நிலையில் படத்தின் மொத்த பாடலும் கடந்த 16ம் தேதி வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணானே கண்ணே' பாடலும், ஸ்ரேயா கோஷல் பாடிய 'வானே வானே' பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில் இன்று 'தள்லே தில்லாலே' என்ற நாட்டுப்புற பாடலை வெளியிட்டுள்ளது ‘விஸ்வாசம்’ படக்குழு. அருண் பாரதியின் வரிகளுக்கு ஆண்டனி தாசன் குரல் கொடுத்துள்ளார். 1.50 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தப் பாடலை சமூக வலைத்தளங்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலுக்காக பிரத்யேக ஹேஸ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்