சினிமா

அஜித்திற்காக ஹைதராபாத்தில் தயாரான அழகிய கிராமம்

அஜித்திற்காக ஹைதராபாத்தில் தயாரான அழகிய கிராமம்

webteam

ஹைதராபாத்தில் அஜித் படத்திற்காக அழகான கிராம செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் முழுக்க திரை உலகமே முடங்கிப் போய் கிடந்தது. தங்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதற்காக வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்து வந்த திரைத் திரையினர் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது படப்பிடிப்பிற்காக அஜித் ஹைதராபாத் சென்றார். அவரது பயணத்தின் போது தற்செயலாக சந்தித்த இசையமைப்பாளர் தமன் அவர் விமானத்தில் பயணிப்பதை போன்ற புகைப்படத்தையும் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். 

இந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்குவதாக இருந்த அஜித்தின் ‘விசுவாசம்’ மே மாதம் தான் தொடங்கியுள்ளது. வழக்கமாக அஜித்தின் படங்கள் படப்பிடிப்பு முடியும் வரை அது வெளியாகும் தேதி ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் படத்தின் தலைப்பையும் படக்குழு கடைசி வரை ரகசியமாக வெளியிடாமல் வைத்திருக்கும். அது ஒரு ட்ரெண்ட் ஆகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த முறையை இம்முறை உடைத்திருக்கிறார் ‘விசுவாசம்’ இயக்குநர் சிவா. படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்றும் முன்கூட்டியே அறிவித்தார். ஆனால் அறித்ததைபோல இதன் ஷூட்டிங் தொடங்கவில்லை. சில மாதங்கள் தள்ளிப்போனது. 

அஜித்தின் ‘விசுவாசம்’படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமான கிராமத்து செட் போடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் தற்சமயம் படப்பிடிப்பு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதற்கு பிறகு மும்பையில் படப்பிடிப்பு நடைப்பெற போவதாக தெரிகிறது. எதிர்பாராத சில தர்ம சங்கடங்கம் எழுந்தாலும் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது படப்பிடிப்புத் தொடங்கியுள்ளதை அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.