விஜய் - தோனி x
சினிமா

GOAT ட்ரெய்லரில் தோனியின் 'Definitely NOT' ஜெர்சியை அணிந்திருந்த விஜய்! CSK பகிர்ந்த ஸ்பெசல் ஸ்டோரி!

Rishan Vengai

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவாகியிருக்கும் படம் 'The Greatest of all time' (The GOAT). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், செப்டம்பர் 5ம் தேதி திரையில் வெளியாகவிருக்கிறது.

பல நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான அதிக எதிர்ப்பார்ப்புடன் இருந்த விஜய் ரசிகர்கள் ’ட்ரெய்லர் எங்க யா’ என இயக்குநர் மற்று தயாரிப்பாளரை டேக் செய்து கேட்கும் அளவுக்கே சென்றுவிட்டனர். ”சிறந்த வெர்சனை கொடுக்க நினைக்கிறோம், தயவுசெய்து பொறுமை காக்கவும்” என கூறிய படக்குழு, இப்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?

தி கோட் படத்தின் ட்ரெய்லரானது பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. “அண்ணன் வரார் வழிவிடு” என தொடங்கும் ட்ரெய்லர் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான சின்ன சின்ன சர்ப்ரைஸ் எலெமண்ட்கள் நிரம்பி வழிகின்றன.

இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது, மருதமலை மாமணியே முருகையா, வயசானாலும் சிங்கம் சிங்கம் தான், No One Can Stop Me" போன்ற வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள், துப்பாக்கி, மங்காத்தா, கில்லி என விஜய்-அஜித் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஒரு தரமான வில்லனாக மோகன் ஜொலிக்கிறார்.

ட்ரெய்லர் மொத்தமும் காமெடி, எமோசன், ஆக்சன், பழைய படங்களின் எஃபெக்ட் என ஒரு புல்பேக்கேஜாக வெளிவந்துள்ளது. விஜய் ரசிகர்கள் ட்ரெய்லரை கொண்டாடி வரும் நிலையில், ட்ரெய்லர் வெளியான 90 நிமிடங்களுக்குள் 5 மில்லியன் ரியல்டைம் பார்வைகளை கடந்து மிரட்டிவருகிறது.

விஜய் அணிந்த 'Definitely NOT' ஜெர்சி.. CSK பகிர்ந்த சிறப்பு ஸ்டோரி!

மங்காத்தாவில் கிரிக்கெட் விளையாட்டின் பெட்டிங்கை மையமாக வைத்து கதையை நகர்த்திய இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய விரும்பமான விளையாட்டை கோட் படத்திலும் வைத்துள்ளார். ட்ரெய்லரில் வரும் ஒரு காட்சியில் சிஎஸ்கே அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிற டீசர்ட்டில் தோனியின் வசமான 'Definitely NOT' வாசகத்துடன் கூடிய டீசர்ட்டை விஜய் அணிந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மற்றொரு காட்சியில் விஜய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நின்று சண்டை செய்யும் விதமான காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் விஜய் அணிந்திருந்த 'Definitely NOT' ஜெர்சியை கொண்டாடிவரும் நிலையில், சிஎஸ்கே தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் விஜயின் கோட் பட டிரெய்லரில் இடம்பெற்ற வசனத்தை வைத்து தோனிக்கு ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளது.

சிஎஸ்கே பகிர்ந்திருக்கும் ஸ்டோரியில், தோனியின் புகைப்படத்துடன் “A LION IS ALWAYS A LION" என்ற கோட் டிரெய்லரில் இடம்பெற்ற வசனும் இடம்பெற்றுள்ளது. இதற்குமுன்னர் கோட் படத்தின் கிளிம்ஸ் வந்தபோதும் தோனி மற்றும் ருதுராஜ் முகத்தை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.