சினிமா

’மாஸ்டர் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது சினிமா காதலர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி’ - தனுஷ்

’மாஸ்டர் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது சினிமா காதலர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி’ - தனுஷ்

sharpana

’மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியாவதையொட்டி ‘நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களை தியேட்டர்களில் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்’ என நடிகர் தனுஷ் தெரிவித்தார்.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியா முழுக்க தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுத்திருந்தது. அதனை 100 சதவீதம் அதிகரிக்கக்கோரி முதல்வரை சந்தித்தார் விஜய். அவரது கோரிக்கையை முதல்வர் ஏற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vijay sir’s Master releases on Jan 13th. <br>It’s great news for cinema lovers and I hope watching movies with friends and family helps to thrive the theatre culture once again. Nothing like a theatre experience. Please take all the safety precautions and watch the film in theatres.</p>&mdash; Dhanush (@dhanushkraja) <a href="https://twitter.com/dhanushkraja/status/1344144403695190017?ref_src=twsrc%5Etfw">December 30, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”விஜய் சாரின் மாஸ்டர் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது சினிமா காதலர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம்போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை தியேட்டர்களில் பாருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.