GOAT PT
சினிமா

அதிரவைக்கும் ’G.O.A.T’ | விஜய்க்கு சம்பளமே ரூ.200 கோடியா? அப்படினா பட்ஜெட், தயாரிப்பு செலவு எவ்வளவு?

யுவபுருஷ்

Silent ஆக சம்பவம் செய்யும் வெங்கட் பிரபு!

நடிகர் விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா பிரசாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். AGS நிறுவனம் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் அளவில் தயாரித்துள்ளது.

முந்தய படங்களைப்போல எதிர்ப்பார்ப்பு எதையும் கூட்டாமல், மிகவும் Silent ஆக பட வேலைகளை பார்த்து வருகிறது வெங்கட் பிரபுவின் குழு. திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு நகர்ந்திருக்கும் விஜய், இன்னும் ஒரு படத்தோடு தனது திரைப்பயணத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார். இப்படி இருக்க, படத்தை கட்சியோடு தொடர்பு படுத்தக்கூடாது. படத்தின் டிக்கெட்டை வாங்கி, அதனை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார் விஜய். அனைத்தையும்தாண்டி, சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் கட்டாய உணவு உட்பட டிக்கெட் விலை 390 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிச்சுகளை அவிழ்க்கும் வெங்கட் பிரபு!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை செயற்கை நுண்ணறிவு மூலமாக படத்தில் கொண்டு வந்துள்ளது படக்குழு. சிவகார்த்திகேயன், த்ரிஷா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக இருக்க, பாடல்கள், டிரெய்லர் அனைத்தும் வெளியானதையடுத்து, படத்தின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக நேர்காணல்களில் பேசி வருகிறார் வெங்கட் பிரபு.

இசைவெளியீட்டு விழா ஏதும் நடத்தப்படாத நிலையில், டிஜிட்டல் முறையில் மிகத்தீவிரமாக Promotion ஐ செய்து வருகிறது படக்குழு. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பட்ஜெட் குறித்து பகிர்ந்துகொண்டார். அதன்படி, படத்தின் நாயகன் விஜய்க்கு 200 கோடி ரூபாயும், மற்ற நடிகர்களின் சம்பளம், படத்தின் தயாரிப்பு செலவுக்கு சுமார் 200 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு? 

திரைத்துறையில் அசுர வளர்ச்சியை பெரும் உச்சத்தை எட்டியுள்ள விஜய்க்கு, இந்த படத்தில் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ள AGS நிறுவனம், 2019ல் தயாரித்த பிகில் படத்திற்கு 180 கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருந்தது. விஜய்க்கு துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக மாறி, அவரை வசூல் நாயகனாக மாற்றியது.

இந்த SCALEஐ 2017ம் ஆண்டு வெளியான மெர்சல் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு வெளியான பிகில், 300 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இப்படி, வசூல் மன்னனாக மாறியுள்ள விஜய்க்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் மார்க்கெட் பெரிய அளவில் அதிகரித்துள்ளதால்தான் அவரை வைத்து நம்பிக்கையாக படம் எடுக்க முடிகிறது என்கிறார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

எங்கெங்கும் கோட் படம்தான்!

படத்தின் வெளியீடு என்று பார்த்தால், தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலுமே கோட் படம்தான் திரையிடப்பட இருக்கிறது. வேறு எந்த படமும் போட்டிக்கே இல்லாமல், சோலோவாக இறங்கியுள்ளது கோட். நடிகர் விஜய்யின் முந்தைய படமான லியோ 620 கோடி ரூபாய் வசூலை குவித்திருந்தது. ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ என்ற பாணியில், தனது சொந்த வசூல் சாதனையை விஜய் மீண்டும் முறியடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.