சினிமா

அடுத்த வாரத்துல இருந்து பட்டாசுதான்.. விஜய் ரசிகர்களை திக்குமுக்காடவைத்த ‘வாரிசு’ படக்குழு

அடுத்த வாரத்துல இருந்து பட்டாசுதான்.. விஜய் ரசிகர்களை திக்குமுக்காடவைத்த ‘வாரிசு’ படக்குழு

JananiGovindhan

விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் எமோஷ்னல் டிராமா படமாக உருவாகும் இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் விஜய்யின் வாரிசு படத்துக்கு தமன் இசையமைக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய அப்டேட்களான டீசர், ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமத்துக்கான வியாபாரத்தை முடித்திருக்கிறது தயாரிப்பு நிர்வாகமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். அதன்படி சாட்டிலைட் உரிமத்தை ₹50 கோடிக்கு சன் டிவியும், ஓடிடி உரிமத்தை ₹60 கோடிக்கு அமேசான் ப்ரைமும் வாங்கியிருக்கிறதாம்.

இதுபோக, இந்தி டப்பிங், வெளிநாட்டு உரிமம் என தலா ₹32 கோடி இருவேறு நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கிறது. இப்படி இருக்கையில், வாரிசு படம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனதாக தகவல் பரவிய நிலையில் தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் போஸ்டரை பகிர்ந்து படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவதாகவும் தயாரிப்பு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

அதனோடு, “தீபாவளி வாழ்த்துகள், அடுத்த வாரத்துல இருந்து சும்மா பட்டாசா இருக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.