சினிமா

மீண்டும் ஒரு பேய்க் கதையில் ’மொட்டை’ ராஜேந்திரன்!

மீண்டும் ஒரு பேய்க் கதையில் ’மொட்டை’ ராஜேந்திரன்!

webteam

ஸ்டன்ட் நடிகராக சின்ன சின்ன ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வந்த ராஜேந்திரன், ’நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். பிறகு தொடர்ந்து வில்லனாக நடித்துவந்த அவர், ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் மூலம் காமெடிக்கு மாறினார். அது ஒர்க் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து காமெடியனாக நடித்து வரும் அவர், சமீபத்தில் சில பேய் படங்களில் நடித்தார். அது ரசிக்கப்பட்டதால் இன்னும் பல பேய்ப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, ‘கருப்பு காக்கா’. தருண் பிரபு இயக்கும் இந்தப் படத்தை வசந்த் மற்றும் பிரகாஷ் தயாரிக்கிறார்கள்.

’காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம் இது. பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதச் சென்ற ஒருவரின் வாழ்க்கை யில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது. ’நான் கடவுள்’ ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் படம் முழுவதும் வரு கிறார். தவிர, டேனியல், ’ராட்டினம்’ சுவாதி, ஜார்ஜ், அஞ்சலி ராவ் உட்பட பலர் நடிக்கிறார்கள்’ என்றார் இயக்குனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.டி.விஜய்மில்டன் நேற்று வெளியிட்டார்.