சினிமா

குருவி படத்திற்கு பிறகு மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் விஜய்?

கலிலுல்லா

குருவி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான குருவி திரைப்படத்தை உதயநிதி தயாரித்திருந்தார். இதற்கு பிறகு விஜய் நடித்த எந்த திரைப்படத்தையும் உதயநிதி தயாரிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உதயநிதி திட்டமிட்டிருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் விஜய் நடிக்க உள்ளார். அந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

- செந்தில் ராஜா