மெர்சல், விவேகம், தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன் ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை கைப்பற்றி வசூல் வேட்டை நடத்த இருக்கிறது பிரபல சோனி மியூசிக் நிறுவனம்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் கொண்ட படங்கள் என்றால் அது விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விவேகம்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ஆகியவைதான். இந்நிலையில் இப்படங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. தற்போதையை லேட்டஸ்ட் அறிவிப்பு என்னவென்றால் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது பிரபல சோனி மியூசிக் நிறுவனம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதே சோனி மியூசிக் நிறுவனம்தான் மெர்சல், விவேகம், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கர்களான விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் கைப்பற்றியதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. 2017ஆம் ஆண்டு சோனி மியூசிக் நிறுவனத்திற்கு சிறப்பான வசூல் வேட்டையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.