நடிகர் விதார்திற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.
மைனா படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விதார்த் அஜீத்துடன் வீரம், குற்றமே தண்டனை, குரங்குபொம்மை ஆகிய படத்தில் நடித்தவர். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஒரு கிடாயின் கருணை ’படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவருக்கு பழனியில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பழனியைச் சேர்ந்த காயத்திரிக்கும், விதார்த்திற்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.