தி கோட் முகநூல்
சினிமா

”DIRECTORS CUT..” வெங்கட் பிரபு போட்ட பதிவு! விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..

ஜெனிட்டா ரோஸ்லின்

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு.

பெரும் ஆவலோடு ரசிகர்களால் எதிர்ப்பார்த்து காத்திருந்த “ தி கோட்” திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 80களில் கலக்கிய நடிகர்கள் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் தோன்றிய கேப்டன் விஜயகாந் டீஇ ஏஜிங் தொழிநுட்பம் செய்யப்பட்ட விஜய்யின் லுக் என பல ஹைலைட்டுகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

வரவேற்பு, விமர்சனம் என்று கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் விஜய்யின் இறுதி திரைப்படத்திற்கு முந்தைய திரைப்படமாக கூறியிருந்தது.

இந்தவகையில்தான், திரையரங்களில் பார்க்காதவர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் விதமாக ஓடிடி தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது ”தி கோட்”. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் குஷியில் இருக்கிறார்கள். இதோடு கூட மற்றொரு குஷியை கொடுக்கும் விதமாக, இயக்குநர் வெங்கட்பிரபு இது குறித்தான பதிவு ஒன்றினை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,"GOAT படத்தின் DIRECTORS CUTக்கு இன்னும் நிறைய VFX மற்றும் இறுதிப் பணிகள் பாக்கி உள்ளது. எனது தயாரிப்பாளருடன் கலந்து பேசி அக்காட்சிகளை DELETED SCENES ஆகவோ அல்லது EXTENDED CUT ஆகவோ வெளியிட திட்டமிடுகிறேன். இப்போதைக்கு இந்த வெர்ஷனை பாருங்கள்."என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, தியேட்டரில் வெளியான கோட் படத்தின் காட்சிகளே தற்போது OTT யிலும் வெளியகியுள்ளது.. விரைவில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதுதான், ரசிகர்களை தற்போது கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது செய்தி..