சினிமா

“முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள்” –எம்ஜிஆரிடம் வாலி

“முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள்” –எம்ஜிஆரிடம் வாலி

webteam

எம்ஜிஆர் நடித்த‘எங்கள் தங்கம்’என்ற படத்திற்காக வாலி பாட்டு எழுதிய போது கலைஞருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு மேடையில் பகிர்ந்து கொண்டார் . இயக்குனர் கிருஷ்ணன், எம்எஸ்வி, தயாரிப்பாளர் மாறன் எல்லோரும் உடனிருக்க எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்குமான டூயட் பாடலில் நான் அளவோடு ரசிப்பவன் என்ற வரியை மட்டும் எழுதிவிட்டு பாக்கு போட ஆரம்பித்தாராம் வாலி. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கலந்துரையாடலை சுவாரசியத்துடன் கூறியுள்ளார்.

இயக்குநர் கிருஷ்ணன் : என்னய்யா வாலி, பாட்டு எழுத சொன்ன பாக்கு போடுற? 
வாலி: முதல் வரி எழுதிட்டேன் அடுத்த வரிதான் வரல. பாக்கு போட்டா யோசனை வரும்
(சில நிமிடங்கள் கழித்து காரில் இருந்து இறங்கி வந்ததாராம் கருணாநிதி)
மாறன்: மாமா வந்துட்டாரு 
கருணாநிதி :என்னய்யா பாட்டு எழுதிட்டியா? 
வாலி: ஒருவரி எழுதிட்டேன் அடுத்த வரிதான் யோசிக்கிறேன் 
கருணாநிதி: முதல் வரி என்ன? 
வாலி: நான் அளவோடு ரசிப்பவன் 
கருணாநிதி: அடுத்த வரியா, எதையும் அளவின்றி கொடுப்பவன்னு எழுதுயா? 

(சில நாட்கள் கழித்து எம்ஜிஆரும் வாலியும் சந்திக்கும் போது எம்ஜிஆர் கட்டியணைத்து வாலியை முத்தமிட்டராம்)

வாலி: இப்ப எதுக்கு இந்த முத்தம்? 
எம்ஜிஆர்: அந்தப் பாட்டுல எதையும் அளவின்றி கொடுப்பவனு எழுதிட்டியே …
வாலி: இந்த முத்ததை கலைஞருக்கு கொடுங்கள், அவர்தான் இத எழுதினாரு 
இப்படி வாலி சொல்லி முடிக்கும் போது கை தட்டல் பறந்தது.