சினிமா

12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’சுப்ரமணியபுரம்’: சசிகுமார் பகிரும் நினைவலைகள்!

12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’சுப்ரமணியபுரம்’: சசிகுமார் பகிரும் நினைவலைகள்!

EllusamyKarthik

இயக்குனர் சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவும் கூறும் வகையில் சசிக்குமார் ட்வீட் செய்துள்ளார். 

“ஜூலை 4 - எனது முதல் படமான ‘சுப்ரமணியபுரம்’ வெளியான நாள். பன்னிரண்டு ஆண்டுகள் இன்றுடன் கடந்துள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உதவியர்களுக்கும், இதனை வெற்றிப்படமாக மாற்றியவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” என அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் சசிகுமார் உடன் நடிகர் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்ததோடு அவர்களுக்கு பெயரும் வாங்கிக்கொடுத்தது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.