தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரை படப்பிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன.
தமிழகத்தில் திரைப்படங்களைப் போலவே சின்னத்திரை தொடர்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டு. குடும்பப் பெண்கள் பலரின் பொழுதுபோக்காக இவை திகழ்கின்றன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 75 நாட்களுக்கும் மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முதல் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கின.
இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெறுவது புதுமையாக உள்ளதாக சின்னத்திரை நடிகர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர்கள், ஊழியர்கள் உட்பட மொத்தம் 60 பேர் மட்டுமே சின்னத்திரை படிப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு ஏற்றபடி கதையை மாற்றியிருப்பதாக சின்னத்திரை குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினர்.