சினிமா

பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்

பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்

Rasus

ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை எனவும் பீட்டா அமைப்பிலும் அவர் இல்லை எனவும் த்ரிஷா தாயார் உமா விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக அவருக்கு எதிராக இணையத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிரான மீம்ஸ்-கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து த்ரிஷா தற்காலிகமாக வெளியேறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்குத்தான் எதிரானவள் இல்லை எனவும், பிறப்பால் ஒரு தமிழச்சி என்றும் அதில் தான் பெருமை அடைவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு நடிகை த்ரிஷா எதிரானவர் அல்ல என்று அவரது தாயார் உமா விளக்கம் அளித்துள்ளார். பீட்டா அமைப்பில் த்ரிஷா உறுப்பினராக இல்லை என்றும், அவர் பீட்டா அமைப்பிற்கு விளம்பர தூதுவர் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தவறான கருத்தை பதிவிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.