சினிமா

“சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - நடிகை த்ரிஷா

webteam

திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த யுனிசெஃப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நல்லெண்ண தூதரான த்ரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது. சினிமா கற்பனையே. அதை பின்பற்றக்கூடாது.

பாலின பாகுபாட்டை முற்றிலும் தவிர்க்க முயற்சிப்போம். இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காப்போம். குழந்தைகளுக்கு எல்லா இடங்களும் பாதுகாப்பானதாக மாற வேண்டும். பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம்” எனப் பேசினார். 

மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலரும் சமூக தொண்டுகளில் தங்களின் பங்களிப்பு குறித்து த்ரிஷாவுடன் பகிர்ந்து கொண்டனர்.