சினிமா

இன்று ஜெயம் ரவி பிறந்தநாள்; ஆர்யா கலாய்ப்பு

இன்று ஜெயம் ரவி பிறந்தநாள்; ஆர்யா கலாய்ப்பு

webteam

இன்று பிறந்தநாள் காணும் தன் நெருங்கிய நண்பரான ஜெயம் ரவியை டுவிட்டரில் கலாய்த்திருக்கிறார் ஆர்யா.

தமிழ் சினிமாதுறையில் ஜெயம் ரவி, ஆர்யா, விஷால், ஜீவா, விஷ்ணு விஷால் அனைவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது. ஒன்றாக பட விழாக்களில் கலந்துக் கொள்வது என எப்போதும் ஒன்றாக சுற்றுவார்கள். அதேசமயம் ஒருவரை ஒருவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கிண்டலடித்து கொள்வது சகஜம். முன்பு ஒருமுறை மேடையில் ஆர்யாவுக்கு கல்யாணம் ஆகாது என்று கிண்டலடித்தார் ரவி. இன்று ரவியின் பிறந்த நாள் வாழ்த்தாக டுவிட்டரில் “நீ ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். எனக்குத் தெரியும்.

இந்த ஆண்டு இன்னும் சிறப்பாய் வருவாய்” என அரசியல்வாதியை வாழ்த்துவதை போல ஆர்யா வாழ்த்தியுள்ளார். அதேபோல சாந்தணு தன் வாழ்த்து செய்தியில் “ஸ்வீட் டார்லிங்” என கருத்திட்டு உள்ளார்.