To Kill A Tiger - ஆஸ்கர் விருது ட்விட்டர்
சினிமா

Oscars 2024 | To Kill A Tiger படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததா?

இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் டொல்பி திரையரங்கில் 96 ஆம் ஆண்டாக இன்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர், ஒப்பனை, படத்தொகுப்பு, இசை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படமாக வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

To Kill A Tiger

முன்னதாக சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கான பட்டியலில் “பாபி ஒயின்: தி பீப்பிள்ஸ் பிரசிடெண்ட்", "தி எடர்னல் மெமரி", "ஃபோர் டாட்டர்ஸ்" மற்றும் "20 டேஸ் இன் மரியுபோல்" ஆகியவற்றுடன் To Kill A Tiger திரைப்படமும் தேர்வாகியிருந்தது.

ஜார்கண்ட்டில் 13 வயது சிறுமி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் To Kill A Tiger. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது தந்தை முன்னெடுத்த சட்டப் போராட்டத்தினை இப்படம் விவரிக்கிறது.

இப்படத்தினை டெல்லியில் பிறந்து கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நிஷா பகுஜா என்ற பெண் இயக்கியுள்ளார்.

இப்படமானது ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இருந்தது. போலவே டொரண்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் 2022ல் பங்குபெற்று பாராட்டினை பெற்றது. மேலும், கனடிய திரைப்படத்திற்கான ஆம்ப்ளிஃபை வாய்ஸ் விருதைப் பெற்றது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தினை பெற்ற இத்திரைப்படம் தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருதை தட்டி செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் விருது கிடைக்கப்பெறவில்லை.