1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம் டைட்டானிக். இதில் சியோனார்டோ டிகாப்ரியோ (ரோஸ்) மற்றும் கேட் வின்ஸ்லெட் (ஜாக்) என்று பலரும் இதில் நடித்திருந்தனர். உலகமும் முழுதும் வெளிவந்து சக்கைப்போட்டு வசூலையும் விருதுகளையும் வாரிக்குமித்து பிரமிப்பை ஏற்படுத்திய டைட்டானிக் திரைப்படம், 11 விருதுகளை வென்றதுடன், உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது .
1912 ஆண்டு ஆர்.எம்.எஸ் டைட்டானிக் (RMS Titanic) இது ஒரு ஒரு ஆடம்பர நீராவிப் பயணிகள் கப்பல் . வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்டு பயணிகளுடன் புறப்பட்ட இக்கப்பலானது, ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகளில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.
இந்த கதையை மக்களின் மனதில் வேரூன்ற வைப்பதற்காக இந்த உண்மைக்கதையுடன் ஒரு காதல் கதையையும் உருவாக்கிய இயக்குனர் கேமரூன் 1997ல் அதை திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டார். எதிர்பார்த்ததை விட டைட்டானானிக் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில், டைட்னானிக் கப்பலின் முதல் வகுப்பு லவுஞ்ச் நுழைவாயிலுக்கு மேலே ஒரு கதவு காணப்படும். இந்த கதவானது பல்சா மரத்தைக்கொண்டு பல வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது என்கிறார்கள்.
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கும் சமயம் கதாநாயகனான ஜாக் கப்பலின் உடைந்த இந்த கதவு பிடித்து அதில் தனது காதலியை அமர்த்தி , உயிர்பிழைக்க வைப்பார். படம் பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கும் காட்சியாக இது இருக்கும்.
ரோஸை காப்பாற்றிய 'டைட்டானிக்' கதவானது சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இதை டைட்டானிக் ரசிகர் ஒருவர் $718,750க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக 'தி ஷைனிங்' படத்தின் இந்தியானா ஜோன்ஸின் சாட்டை மற்றும் ஜாக் நிக்கல்சனின் கோடாரி போன்றவை ஏலம் எடுக்கப்பட்டதை விட அதிகமாக டைட்டானிக்கின் கதவு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாக் பயன்படுத்திய சிஃப்பான் ஆடையானது $125,000 டாலருக்கு ஏலம் போனது என்று தெரியவந்துள்ளது.