நடிகர் கார்த்திக் குமார்  முகநூல்
சினிமா

பட்டியலின பெண்கள் குறித்து அவதூறு பேச்சு|”அந்த ஆடியோ என்னோடது இல்லை”- கார்த்திக் குமார் விளக்கம்

பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆடியோ வைரலான நிலையில், நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆடியோ வைரலான நிலையில், நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

'தெய்வதிருமகள்', 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் கார்த்திக் குமார். பாடகி சுசித்ராவுடன் திருமணமாகி விவகாரத்து பெற்ற நிலையில், மீண்டும் இருவருக்குமிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக கார்த்திக் குமார் ஓரின சேர்க்கையாளர் என சுசித்ரா கூறியதற்கு, அவர் பதில் அளித்துள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் பட்டியலின பெண்கள் தொடர்பாக அவர் பேசுவது போல் உள்ளதால், சமூக ஆர்வலரான இளமுருகுமுத்து தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யத் தேசிய பட்டியல் இன ஆணையம் சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பிக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் ஆடியோவில் பதிவாகியுள்ளது தனது குரல் இல்லை என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் குமார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அந்த ஆடியோ எனது குரல் இல்லை. அதில் எனது குரல் சித்தரிக்கப்பட்டு அந்த ஆடியோவில் பதிவிட்டு இருக்கிறது. இந்த ஆடியோ மூலமாக பல அச்சுறுத்தல்கள் எனக்கு வருகிறது. ஆகவே, காவல்துறை எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளின் சத்தம் அந்த ஆடியோவில் கேட்கிறது. எனக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.” என்று கார்த்திக் குமார் குறிப்பிட்டுள்ளார்.