நடிகை பானுப்பிரியா வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் கைதாகி இருந்த 16 வயது சிறுமி விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை பானுப்பிரியா வீட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டு வேலைக்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டார். இந்தச் சிறுமி, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடியதாக பாண்டிபஜார் காவல்நிலையில் பானுப்பிரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தச் சிறுமியை கைது செய்தனர். இதனையடுத்து சிறுமி கெல்லீஸ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே தனது மகளை, பானுப்பிரியா குடும்பத்தினர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாயார் ஆந்திரா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் திருட்டு வழக்கு கெல்லீஸ் குழந்தைகள் நல நீதிமன்றத்தில் நடந்து வந்தது. காவல்துறையில் தரப்பில் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் திருட்டு வழக்கில் இருந்து 16 வயது சிறுமியை விடுதலை செய்து நடுவர் சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.