சினிமா

வாங்காமல் விடும் 40 காசால் திரையரங்குகளுக்கு வரும் வருமானம்

webteam

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை போக மீதமிருக்கும் 40 காசுகளை வாங்காமல் விடுவதால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1920 வருமானம் வருகிறது. 

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலாதனையடுத்து தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதை ரசிகர்கள்‌ அதிர்ச்சியுடன் எதிர்கொண்டுவருகிறார்கள். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு டிக்கெட்டின் விலை 153 ரூபாய் 60 காசுகளாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஒருபுறம் எனில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மறைமுகமாக கட்டணம் கூடுதலாக செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒரு டிக்கெட் வாங்கும்போது மீதமுள்ள 40 காசுகளை யாரும் தரப்போவதில்லை. இதன் மூலம் 1200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய திரையரங்கில் ஒரு காட்சிக்கு 480 ரூபாய் கிடைக்கும் அதுவே நான்கு காட்சிகள் எனும்போது, ரூ. 1920 கிடைக்கும். இதனால் 6 திரைகள் கொண்ட திரையரங்கம் ஒன்றில் 11 ஆயிரத்து 520 ரூபாய் வரை நாம் வாங்காமல் விடும் 40 காசு மூலம் வருவாயாக கிடைக்கிறது.. இது சராசரியாக ஒருநாளைக்கு கிடைக்கும் தொகைதான்.