சினிமா

ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டரில் திரையிடப்படாது - திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டரில் திரையிடப்படாது - திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

Sinekadhara

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடும்போது 4 மாதங்களுக்குப் பிறகு அந்த படங்களை திரையரங்குகளில் வெளியிட்டுக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. தற்போது 4 மாதங்கள் முடிவடைந்த சில திரைப்படங்களின் உரிமையாளர்கள் அவற்றை திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இறுதியாக ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். படங்கள் ஓடிடி விற்பனைக்கான பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகளை வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளனர்.