சினிமா

இனிமேல் ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான் தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம்

இனிமேல் ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான் தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம்

webteam

தாஜ்மஹாலை சுற்றி பார்க்க தற்போது நடைமுறையில் உள்ள கால அளவை தொல்லியல் துறை குறைத்துள்ளது.

ஒருநாளைக்கு தாஜ்மஹாலை சுற்றி பார்க்க 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். அதில் வெளிநட்டவர் வருகை மிக அதிகம். ஆக ஆண்டிற்கு 80 லடத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருகின்றார்கள். 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த பின் தாஜ்மஹால் மீது பல நாட்டு சுற்றால பயணிகளின் பார்வை விழுந்தது. மேலும் தாஜ்மஹால் குறித்த சர்ச்சையால் அதன் வளர்ச்சி நாளுக்கு நால் கூடி வருகிறது.

இந்நிலையில் இந்திய தொல்லியல்துறை மனித மாசுப்பாட்டில் இருந்து தாஜ்மஹாலை காப்பாற்ற பார்வையாளர்களின் கால வரம்பை குறைக்க மாநில அரசிற்கு ஒரு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அதன்படி நாளை முதல் இனிமேல் ஒருநாளைக்கு மொத்தம் 3 மணிநேரம் மட்டுமே திறந்து வைக்கப்பட உள்ளது. அதன் மாசை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையா? இல்லை அதன் படிப்படியாக மூடுவதற்கான முன்னெச்சரிக்கையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 6:30 வரை திறந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.