சினிமா

என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள்: இயக்குனர் வேதனை

என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள்: இயக்குனர் வேதனை

webteam

போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு சேனல்கள் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டன என இயக்குனர் புரி ஜெகந்நாத் வேதனையுடன் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் புரி ஜெகந்நாத். ஆக்‌ஷன் படங்களை இயக்குவதில் வல்லவர். இவரது கதைதான், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான, போக்கிரி. ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி.

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இவர் உட்பட 12 தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. இதன் விசாரணை நேற்று தொடங்கியது. இதில் ஆஜரான பூரி ஜெகந்நாத் விளக்கமளித்துவிட்டு வந்தார். 

பின்னர் அவர் கூறும்போது, ’எனக்கும் போதை பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சில தெலுங்கு சேனல்கள், தெரிந்ததும் தெரியாததும் என்று என்னை வைத்து பரபரப்பு செய்திகளை வெளியிட்டுவிட்டது. இதன் மூலம் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள். என் அம்மா, மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரர்கள் அனைவருமே இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நான் மட்டுமல்ல, மற்ற சினிமா துறையினரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், ‘உண்மை என்ன என்று முழுமையாகத் தெரிய வருவதற்குள் மீடியா செய்திகளை பரபரப்பாக்குவது நியாயமற்ற ஒன்று’ என்று கூறியுள்ளார்.