சினிமா

“சமூக வலைதளங்களிலிருந்து விலகுகிறேன்” - தெலுங்கு முன்னணி இயக்குநர் கொரட்டலா

“சமூக வலைதளங்களிலிருந்து விலகுகிறேன்” - தெலுங்கு முன்னணி இயக்குநர் கொரட்டலா

sharpana

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி நடிகர்களையும் ஸ்டார்களையும் இயக்கிய முன்னணி இயக்குநர் கொரட்டலா சிவா, இன்று தனது சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். அடுத்ததாக, மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்கிய  ‘ஜனதா கரேஜ்’  படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவா, தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்திலிருந்து ஜுனியர் ’என்.டி.ஆர் 30’ படத்தையும் இயக்கவிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டுதான் ஜுனியர் என்.டி.ஆர் ’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘என்.டி.ஆர் 31’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிரஞ்சீவி மற்றும் என்.டி.ஆர் படங்களை முடித்துவிட்டு அல்லு அர்ஜுனின் புதிய படத்தை கொரட்டலா சிவாதான் இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் மூன்றாம் அலை வருவதற்குள் தொடர்ச்சியாக சினிமா பணிகளில் பிசியாகவுள்ளதால் சமூக வலைதளங்களில் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால், எதற்காக விலகுகிறேன் என்று காரணத்தை சொல்லவில்லை. இயக்குநர் கொரட்டலா சிவாவை ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கு மேல்  பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது