சினிமா

“ஸ்டுடியோவில் வைத்து என்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்”:படத்தை வெளியிட்ட நடிகை

“ஸ்டுடியோவில் வைத்து என்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்”:படத்தை வெளியிட்ட நடிகை

webteam

தயாரிப்பாளர் மகன் என்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தெலுங்கு நடிகை பகிரங்கமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்கள் முன்பாக தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தார் நடிகை ஒருவர். தனக்கு பாலியல் ரீதியாக பலர் தொந்தரவு தருவதாகக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். அந்தப் படத்தைக் கண்ட மீடியா உலகம் பரபரப்பாக செய்தியை வெளியிட்டது. பொது வெளியில் அவர் இதைபோல் ஆடைகளை களைந்து அரை நிர்வாணம் இருந்ததால் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்திட்டு வந்தனர். மேலும் காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தினர். பிறகு தெலுங்கு திரை உலகினர் சிலர் ஒன்றாகக் கூடி அவரோட இனி இணைந்து நடிக்கமாட்டோம் என தீர்மானம் வெளியிட்டனர்.

இந்நிலையில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தயாரிப்பாளர் மகன் ஒருவர், அவருடன் நெருக்காக உள்ளதைப்போல காட்சி பதிவதிவாகி உள்ளது. நடிகையோடு ‘லிப் லாக்’ செய்யும் அந்தப் புடைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து அந்நடிகை “அவர் என்னை அவரது ஸ்டுடியோவில் வைத்து பாலியல் வன்முறை செய்துவிட்டார். மேலும் அவர் என்னை சில தயாரிப்பாளர் மற்றும் பெரிய இயக்குநர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.  இந்தக் கொடுமை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக பாலிவுட் சினிமாவில் கங்கனா ரனாவத் போன்றவர்கள் இதைப்போல் விஷயங்களை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தி பேசியுள்ளனர்.