சினிமா

கீர்த்தி சுரேஷை பாராட்டிய ஆந்திரா முதலமைச்சர்..!

Rasus

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்கு படமான ‘மகாநடி’ டீமை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைத்து பாராட்டியுள்ளார்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம் ‘மகாநடி'. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் இப்படம் வெளியானது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அதேபோல, படத்தின் நாயகனாக ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இப்படத்தில் சாவித்ரி போன்று நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் பல சிரமம் எடுத்து நடித்திருந்தார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் ‘மகாநடி’ டீமை அழைத்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார். அதேபோல படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கும் சந்திரபாபு நாயுடு பாராட்டுடன் கூடிய வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி உறுப்பினர்களையும் படத்தை பார்க்குமாறு சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். மகாநடியின் தயாரிப்பாளர் அமராவதியின் வளர்ச்சி திட்டத்திற்காக ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.