சினிமா

திரையரங்குகள் மூடல்: வாய் திறந்தார் ரஜினிகாந்த்

webteam

கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். ஆகவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் தொடர்பாக கருத்துகளைப் பேசி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினிகாந்த், திரைத்துறையினரின் பிரச்னைக்கே குரல் கொடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கேளிக்கை வரியை குறைக்க வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இன்று 3வது நாளாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.